குறைந்த வருமானத்தினைப் பெறும் அங்கவீனமுற்ற நபர்களின் நலன்புரியினை மேம்படுத்தும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அமுலாக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களினை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரூபா. 3000/- என்றவாறான வாழ்வாதார உதவி, 2019 ஆம் ஆண்டிலிருந்து ரூபா. 5,000/- என்றவாறு அதிகரிக்கப்பட்டு 32,000 பயனாளிகள் எண்ணிக்கை்கு புதிய 40,000 பயனாளிகளினை ஒன்றுசேர்த்து மொத்த எண்ணிக்கையினை 72,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள்

  • அங்கவீனமுற்ற நபர் என்பதற்கு அரச மருத்துவரின் பரிந்துரை
  • குடும்பத்தின் மாதாந்த வருமானம் ரூபா. 6,000/- ஐ விடகு குறைவான வருமானமாக இருத்தல்.

விண்ணப்பிக்கும் முறை

தங்களுக்கு உரித்தான பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தரினைச் சந்தித்து உரிய விண்ணப்பப் படிவங்களினைப் பூர்த்தி செய்து பதிவு செய்தல் வேண்டும்.