தொழிலொன்றில் ஈடுபடக்கூடிய மட்டத்திலுள்ள அங்கவீனமுற்ற நபர்கள்,  பிரத்தியேகத் துறையின்   தொழிலொன்றுக்கு அனுப்பப்படுவதுடன், அந்நிறுவனம்  கொடுப்பனவு  செய்யும் சம்பளத்திலிருந்து, 50% (ஆகக்கூடியது ரூபா. 15,000/- என்றவாறு)  24 மாதங்களுக்கு இவ் அலுவலகத்தினூடாக கொடுப்பனவு  செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது.  அதன் பிரகாரம், 2019  ஆம் ஆண்டு  தொடர்பிலான  இச் செயற்திட்டத்தின்  ஆரம்பக் கட்டத்தின்  செயற்பாடுகள் நிறைவு  பெற்றுள்ளன.  இங்கு பிரதேச  செயலகத்  தொகுதி மட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்களினை இனங்காணுதல்,   தொழில்களினை வழங்குவதற்கு இணக்கத்தினைத் தெரிவிக்கும்  பிரத்தியேக நிறுவனங்களினை ஒருங்கிணைத்தல்  போன்ற  செயற்பாடுகள்  இடம்பெறுகிறது. அதன் பிகராரம்,  சகல மாவட்டச்  செயலாளர்கள்,  பிரதேச  செயலாளர்கள்  கலந்துரையாடல்களினூடாகவும் மற்றும் சுற்றுநிரூபத்தினூடாகவும்

விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளனர்  என்பதுடன், உடன்படிக்கையினூடாக  பிரத்தியேக நிறுவன்ங்களினை ஒருங்கிணைப்பற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இனங்காணப்பட்ட 30 அங்கவீனமுற்ற நபர்கள், 2020  ஆம் ஆண்டில்   தொழில் பயிற்சிக்கு  முன்வைக்கப்பட்டுள்ளனர்.  2021  ஆம் ஆண்டிலும்   மேலும் அமுலாக்கப்பட்டு வருகிறது.