அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களினை, அங்கவீனமுற்ற நிலைக்கு உட்படுவதைத் தடுப்பதை  நோக்கமாகக்  கொண்டு இந்நிகழ்ச்சித் திட்டம் அமுலாக்கப்படுகிறது. இங்கு, அரச மருத்துவசாலைகளில் வழங்கப்படாத மருந்துகளினைப்  பெற்றுக்  கொள்ளுவதற்கும், சிகிச்சைகளுக்குச்  செல்லுவதற்கும், இதயம், கண், சிறுநீரகம், மூளை, இடுப்பு எலும்பு,  காது திசு   போன்ற  வேண்டிய அறுவை சிகிச்சையொன்றுக்குத்  தேவைப்படும் நிதியினைச்  செலுத்துவதற்குமாக, ரூபா. 6,000/-  க்கும் குறைவான வருமானத்தினைப்  பெறும் குடும்பங்களுக்கு ரூபா 20,000/- வரை இதன் கீழ் உதவி  வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறைமை

  • நிதியுதவி  தொடர்பிலான  கோரிக்கைக் கடிதமொன்று இருததல்  வேண்டும். 
  • மருத்துவச் சான்றிதழ் முன்வைத்தல்  வேண்டும்
  • மருத்துவ அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சை தொடர்பில்  செலவாகும்  நிதி குறிப்பிடப்பட்டிருத்தல்  வேண்டும்.
  • கொள்வனவு  செய்யப்படும் மருந்துகளின்  விவரக் குறிப்பினை மருத்துவ உத்தியோகத்தர் உறுதிப்படுத்தி முன்வைத்தல்  வேண்டும். 
  • அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களில்  பெறப்பட்ட மதிப்பீடுகளுக்கு மாத்திரமே  கொடுப்பனவு  செய்யப்படும். 
  • கிராம உத்தியோகத்தர், சமூக  சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச  செயலாளரின் அங்கீகாரத்துடன் உரிய  விண்ணப்பங்கள் பூர்த்தி  செய்யப்பட்டிருத்தல்  வேண்டும்.