குறைந்த வருமானத்தினைக் கொண்ட அங்கவீனமுற்ற நபர்களின் குடும்பங்களில் நிலவும் வறுமையினைக் குறைப்பதற்கு சுயதொழிலொன்றினை ஆரம்பித்தல் அல்லது ஊக்குவிப்பதற்காக நபர் ஒருவருக்கு அல்லது குடும்பமொன்றுக்கு ஆகக்கூடியது ரூபா. 25,000/- வரை சுய தொழில் உதவியினை வழங்குதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீ்ழ் இடம்பெறுகிறது. சுயதொழிலினை ஒழுங்குபடுத்துதல், உற்பத்திகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுதல் மற்றும் விற்பனைக்கு தலையீடு செய்தல் இங்கு இடம்பெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறைமை
- விண்ணப்பதாரரின் மாதாந்த வருமானம் ரூபா. 6,000/- ஐ விடக் குறைவானதாக இருத்தல் வேண்டும்.
- சுயதொழிலினை ஆரம்பிப்பதற்குத் தேவைப்படும் செலவு மதிப்பீட்டினை முன்வைத்தல் வேண்டும்.
- மதிப்பீட்டுடனான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் முன்வைத்தல் வேண்டும்.