எந்தவொரு வருமானமுமற்ற, காணி தொடர்பில் உரித்தினைக் கொண்டபோதிலும் வீடொன்றினை இழந்த அங்கவீனமுற்ற நபர்களுக்கு வீடொன்றினைக் கட்டும் நிகழ்ச்சித் திட்டம் 2001 ஆம் ஆண்டிலிருந்து அமுலாக்கப்படுவதுடன், தேசிய லொத்தர் சபையின் சுப்பிரி வாசனா லொத்தரினூடாகக் கிடைக்கும் வருமானத்திலிருந்து 5% வருடாந்தம் இந்நிதியத்திற்கு ஒதுக்கி நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய வீடொன்றினை நிர்மாணிப்பதற்கு ஆகக்கூடிய உதவித் தொகை ரூபா. 250,000/- ஆகும். அவ்வீட்டினைப் பழுதுபார்ப்பதற்கு ஆகக்கூடிய தொகை ரூபா. 150,000/- ஆகும். இந்நிதி 3 தவணைகளில் வழங்கப்படும் என்பதுடன், முதலாவது தவணை ரூபா. 100,000/- ஆகவும், இரண்டாவது தவணை ரூபா. 100,000/- ஆகவும், இறுதித் தவணை ரூபா. 50,000/- ஆகவும் கொடுப்பனவு செய்யப்படும். பழுதுபார்ப்பதற்கு 2 தவணைகளில், முதலாவது தவணை ரூபா. 100,000/-, என்றவாறும் இரண்டாவது தவணை ரூபா. 50,000/- என்றவாறும் கொடுப்பனவு செய்யப்படும்.

பூர்த்தி  செய்யப்பட  வேண்டிய தகைமைகள்

  • தமக்கு உரித்தான இடமொன்றாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு இல்லையாயின் முறைசார் உடன்படிக்கையினூடாக ஒப்படைப்பு இடம்பெற்றிருத்தல்  வேண்டும். 
  • கிராம  உத்தியோகத்தர், சமூக  சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச  செயலாளரின் அங்கீகாரத்துடன் உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி  செய்யப்பட்டிருத்தல்  வேண்டும். 
  • அங்கவீனத்தினைக்   கொண்டவர் என்பதை மருத்துவ அறிக்கையினூடாக உறுதிப்படுத்துதல்  வேண்டும். 
  • நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் வீட்டுக்கான மதிப்பீடு மற்றும் வீட்டு வரைபடத்தினை, பிரதேச  செயலகத்தின்   தொழில்நுட்ப உத்தியோகத்தரினால்  ஒப்பமிடப்பட்டு உத்தியோகபூர்வமான   இறப்பர் முத்திரையிடப்பட்டு  உறுதிப்படுத்துதல்   வேண்டும். 
  • தற்போது வசிக்கும் வீட்டினை   தௌிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் குடும்ப அங்கத்தவர்களினைக்  கொண்ட புகைப்படமொன்றினூடாக முன்வைத்தல்  வேண்டும். 
  • குடும்பத்தின் மாதாந்த வருமானம் ரூபா. 6,000/-  ஐ விடக் குறைவானதாக இருததல்  வேண்டும். 
  • வயது வரையறை 18-70 வயதிற்கிடையில் இருத்தல்  வேண்டும்.
  • செலவு மதிப்பீடொன்றினை முன்வைத்தல்  வேண்டும்.
  • காணியினைக்  கொண்டிராத ஒருவராயின், காணியினை வழங்குவதற்கு விருப்பினைக் கொண்ட ஒருவரினை முன்வைப்பாராயின் பிரதேச  செயலாளருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருத்தல்  வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறைமை

  • தங்களுக்கு உரித்தான பிரதேச  செயலகத்தின் சமூக  சேவைகள் உத்தியோகத்தரினைச் சந்தித்து உரிய விண்ணப்பங்களினைப் பூர்த்தி  செய்யது பதிவு  செய்தல்  வேண்டும்.