அங்கவீனமுற்ற நபர்களினை மறுவாழ்வளிப்பதற்கு உதவும் வகையில், ஒன்றுதிரட்டும் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்விப்பதற்கும் மற்றும் அவர்களினை சுயாதீமான நபர்களாக உருவாக்குவதற்குமாக மூக்குக் கண்ணாடிகள், சக்கர நாற்காலிகள், கையூன்றுகோல்கள், ஊன்றுகோல்கள், நடைச் சட்டங்கள் போன்ற உபகரணங்கள் என்றவாறும், காற்று மெத்தை, நீர் மெத்தை போன்ற விசேட உபகரணங்களுக்கு ஆகக்கூடியது ரூபா. 20,000/- வரை, செவிப்புலக் கருவிகள் தொடர்பில் ஆகக்கூடியது ரூபா. 15,000/- - ரூபா. 35,000/- நிதியுதவியினை வழங்குதல் இடம்பெறுகிறது. ரூபா. 6000/- க்கும் குறைவான வருமானத்தினைப் பெறும் நபர்கள் தொடர்பில் மருத்துவப் பரிந்துரைகளின் கீழ் இவ் உதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறைமை

  • மருத்துவ அறிக்கையொன்றினூடாக அங்கவீனம் என்பதை உறுதிப்படுத்துதல்  வேண்டும். 
  • கிராம உத்தியோகத்தர், சமூக  சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச  செயலாளரின் அங்கீகாரத்தின் பிரகாரம் உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி   செய்யப்பட்டிருத்தல்  வேண்டும்.
  • விசேட உபகரணங்கள்  தேவைப்படின், அது  தொடர்பிலான மதிப்பீட்டினை முன்வைத்தல்  வேண்டும். 
  • உபகரணத்தினைக்  கையேற்பவர்  வேறொரு நபராயின், விண்ணதாரரின் எழுத்துமூல அறிவிப்பு அவசியமாகும்