அங்கவீனமுற்ற நபர்களின் மற்றும் அங்கவீனமுற்ற நபர்கள் கல்வியினைப் பெறும் விசேடக் கல்வி அலகுகள் தொடர்பிலும், அவர்களின் விளையாட்டுக்கள், கலை மற்றும் அழகியல் திறன்கள் மற்றும் பிற திறைமைகளினை வளர்க்கும் நோக்கத்துடன் ரூபா. 50,000/- ஆகக்கூடியது வரை நிதி அனுசரணையினை வழங்குதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக இடம்பெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறைமை
- கிராம உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடன், உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- உபகரணங்களினைக் கொள்வனவு செய்வதாயின், உரிய மதிப்பீடுகள் மற்றும் கொள்முதல் அங்கீகாரத்துடன் முன்வைத்தல் வேண்டும்.
உபகரணங்களினைப் பெற்றுக் கொள்ளுவதற்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ கோருவதற்கு முடியும்.