இது, குறைந்த வருமானத்தினைக் கொண்ட அங்கவீனமான சிறார்கள் மற்றும் அங்கவீனத்தினைக் கொண்ட பாதுகாவலர்களின் சிறார்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்நாளில் ஒரு தடைவை மாத்திரம் வழங்கப்படும் ஆகக்கூடியது ரூபா. 10,000/- என்றவாறான கல்வி உபகரணங்களினை வழங்குவதற்கு உதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறைமை
- விண்ணப்பதாரரின் மாதாந்த வருமானம் ரூபா் 6,000/- ஐ விடக் குறைவானதாக இருத்தல் வேண்டும்
- கல்வி உதவிக்குத் தேவைப்படும் செலவு மதிப்பீடு முன்வைக்கப்படுதல் வேண்டும். .
- கிராம உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடன், உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- அங்கவீனத்தின் இயல்பினை மருத்துவ அறிக்கையொன்றினூடாக உறுதிப்படுத்துதல் வேண்டும்.