முழுநாட்டினையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானப் பயனாளிகளான சிறுநீரக நோயாளர்களுக்கு ரூபா. 7,500/- மாதாந்த வாழ்வாதார உதவியொன்றினை வழங்குதல் இதன் கீழ் இடம்பெறுகிறது. இதுவரையில் 39,169 பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள்.
- சிறுநீரக நோயாளி ஒருவர் என்பதை உறுதிப்படுத்தும் அரச மருத்துவரின் பரிந்துரை.
- குடும்பத்தின் மாதாந்த வருமானம் ரூபா. 6,000/- ஐ விடக் குறைவான வருமானாக இருத்தல்.
விண்ணப்பிக்கும் முறை
தங்களுக்கு உரித்தான பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தரினைச் சந்தித்து உரிய விண்ணப்பப் படிவங்களினைப் பூர்த்தி செய்து பதிவு செய்தல் வேண்டும்.