வாழ்க்கைத் துணை மரணித்தல், பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத்துணை   கைவிட்டுச்  செல்லுதல்  போன்ற காரணங்களினால்  தனிப் பெற்றாராக்கப்பட்ட குடும்பங்கள் முகங்கொடுக்கும்  பொருளாார, சமூக, உள நிலைகளினைக்  கைவிடுவதற்கு  உதவிக்கரம் நீட்டுவதற்கு இந்நிகழ்ச்சித் திடடம் அமுலாக்கப்படுகிறது. அதன் பிரகாரம், சில துணைநிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் தனிப் பெற்றாரினைக்  கொண்ட  நிகழ்ச்சித் திட்டம் அமுலாக்கப்படுகிறது. 

  • ருபா. 30,000/- வரையில் சுய தொழில் உதவி வழங்கப்படுதல்.
  • வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுதல்.
  • திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுதல்.
  • ரூபா. 10,000 வரையில் கல்வி உதவி வழங்குதல்.
  • வாசிகசாலைகளினை ஆரம்பித்தல்.

விண்ணப்பிக்கும் முறைமை

  • கிராம உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரத்தின் பிரகாரம் உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • வாசிகசாலையொன்றினை அமைப்பதற்கு சுமார் 15 தன்னார்வத் தலைவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.